பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி

இந்தியாவுடன் தொழில்நுட்பத் துறையில் இணைந்து பணியாற்ற மற்ற நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தது குறித்து...

News image

விவாடெக் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி - PTI

Updated On :18 ஜூன் 2026, 7:23 pm IST

இந்தியாவுடன் தொழில்நுட்பத் துறையில் இணைந்து பணியாற்ற மற்ற நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் விவாடெக் 2026 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, "உலகளாவிய நெருக்கடி காலத்திலும் அனைவருக்குமான தொழில்நுட்பம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. செயற்கை நுண்ணறிவை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். அது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவை பொருத்தவரையில், செயற்கை நுண்ணறிவு என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தியா ஒரு திறந்த சமூகமாகவும், உலகின் மிகப்பெரிய திறமை மிகுந்த மையமாகவும் இருக்கிறது.

நாங்கள் விதிமுறைகளை எளிமைப்படுத்தி, வணிகத்தை எளிதாக்குகிறோம்.

விவாடெக் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி

விவாடெக் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி - PTI

புதுப்புது கண்டுபிடிப்புகள் முதல் வணிகமயமாக்கல் வரையில், 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான இலக்குசார் ஊக்கத்தொகைகள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம்.

உலகின் மிகவும் மலிவு விலையில் இணைய சேவை மற்றும் குறைந்த விலையில் பசுமை ஆற்றலையும் வழங்குகிறோம். தொழிற்துறையை மேம்படுத்துவதில் நமது அரசின் அணுகுமுறை தெளிவாக உள்ளது.

முன்னெப்போதையும்விட நாம் ஒன்றாக வேகமாகப் பயணிப்போம். இங்கு உள்ள அனைவரும் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி, அனைவருக்கும் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.

Summary

VivaTech 2026: India is the world's largest talent pool, says PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.