இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் விவசாயிகள் இன்று(ஜூலை 21) போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், தில்லிக்கு செல்லும் ஷம்பு எல்லைப் பகுதி, தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தில்லிக்குள் நுழையாமல் தடுக்க, ஷம்பு எல்லையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக தில்லியில் நடைபெறவுள்ள 'கிசான் மகாபஞ்சாயத்' (விவசாயிகள் பேரணி) போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் விவசாயிகளைத் தடுப்பதற்காக, ஹரியாணா அரசு ஷம்பு எல்லையை மூடியது.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாயத் தலைவர் சர்வன் சிங் பாந்தர், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ”பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன; விவசாயிகளின் வாகனங்கள் செல்லாமல் தடுக்கும் வகையில் காகர் ஆற்றின் மீதான பாலத்தில் தடுப்புகளும் சிமெண்ட் தடுப்புக்கற்களும் வைக்கப்பட்டிருந்தன.
'தேஷ் பச்சாவ் மோர்ச்சா' என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி, தில்லியில் உள்ள கிசான் காட்டில் நடைபெறவுள்ளது.
இதில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பார்கள்” என்றார்.
மேலும் அவர், விவசாயிகள் அமைதியான முறையில் பயணிக்கவே திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கூறினார்.
ஷம்பு எல்லைப் பகுதியை அடைந்த பிறகு, பிற விவசாயத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Summary
As farmers plan to stage a protest in Delhi against the India-US trade agreement, the Shambhu border point leading to the capital has been sealed with barricades
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடியடி... விரட்டியடிப்பு... ஜந்தர் மந்தரில் தொடரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்!

சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

சிஜேபி போராட்டம்! துணை ராணுவ கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!








