சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மாணவர்கள், மனநல ஆலோசனைகளைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்...

News image

தமிழக அரசு - கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2026, 3:44 pm IST

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதையடுத்து மாணவர்கள், மனநல ஆலோசனைகளைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"தமிழ்நாடு அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.

2026-27 கல்வியாண்டின் நீட் தேர்வு முடிவுகள் நேற்று (16.07.2026) வெளியாகி உள்ளது.

மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வு முடிவுகள்

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) 2026, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தத் தோ்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ரத்து செய்தது.

இந்த விவகாரம் சிபிஐ வசம் சென்ற நிலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வின் முடிவை என்டிஏ வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.

இதில் 720 மதிப்பெண்களுக்கு 715 மதிப்பெண்களைப் பெற்று ஆா்யன் குப்தா (பஞ்சாப்), பன்ஷுல் பன்சல் (ஹரியாணா) ஆகியோா் முதலிடத்தைப் பெற்றுள்ளனா். 700 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவா்களும், 650 மதிப்பெண்களுக்கு மேல் 1,492 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

ஒட்டுமொத்தமாக 11.21 லட்சம் மாணவா்கள் மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு தகுதி பெற்றுள்ளதாக என்டிஏ தெரிவித்தது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Summary

NEET Exam Results: Toll-free number for mental health counseling by TN govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.