இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 16) வெளியிட்டது. இதில், 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 58 சதவீதம் பேர் மாணவிகள்.
பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியாணாவைச் சேர்ந்த பன்ஷுல் 715 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். 138 மாணவர்கள் 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. எனினும் இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நீட்மறுதேர்வு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5,400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு 22.79 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
இதில், பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியாணாவைச் சேர்ந்த பன்ஷுல் 715 மதிப்பெண் பெற்று நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அகில இந்திய தரவரிசைப் பெற்றவர்கள், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள், பிரிவு வாரியாக முதலிடம் பிடித்தவர்கள், தகுதி பெறுவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் மொழி வாரியான பங்கேற்பு விவரங்கள் அடங்கிய பட்டியல்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
19 தேர்வர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
38 தேர்வர்கள் 690க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
1,492 தேர்வர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
10,160 தேர்வர்கள் 600 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
90,780 தேர்வர்கள் 500 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
நீட் மறுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் 17 - 19 வயதுக்குட்பட்டவர்கள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் மறுதேர்வு முடிவுகள் பார்க்கும் தளத்தின் முகப்பு
Summary
NEET UG result 2026 declared: 138 candidates score above 690
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய சா்ச்சையில் சிக்கியுள்ள நீட் மறுதேர்வு: தவறான கேள்விக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?
நீட் மறுத்தேர்வில் பங்கேற்காத 2 லட்சம் மாணவர்கள்! காரணம் என்ன?

நீட் மறுதேர்வு! கடினமா? எளிமையா?

நீட் மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்குமா? எல்லாம் ஊகங்கள்தான்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



