சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மருத்துவக் கல்வி இயக்குநகரம் கூறியுள்ளது பற்றி...

News image

நீட் மறுதோ்வு - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 4:20 pm IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 ஆம் தேதியே கடைசி நாளாகும் என்றும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடந்த நீட் மறுதேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 16) வெளியாகின.

இதையடுத்து இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 29 ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதுவரை 41,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீட் மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளதால் மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஒரு வாரம் கால அவகாசம் உள்ளது என்றும் இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் 23 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் எனவே ஜூலை 23 ஆம் தேதிக்குள் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ள இயக்குனரகம், விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து கடந்த ஏப். 28 ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 5,200 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

July 23 is the last day to apply for MBBS and BDS: TN directorate of medical education

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.