நாடு முழுவதும் நீட் மறுதேர்வு இன்று (ஜூன் 21) நடந்து முடிந்துள்ளன. நீட் தேர்வுக்கான கேள்விகள் கடினமாக இருந்தனவா? எளிமையாக இருந்தனவா என்ற கேள்வி எழுவது வழக்கமானது.
ஆனால், இம்முறை பெரும்பாலான மாணவர்கள் நீட் மறுதேர்வே கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட தேர்வானது, மறுதேர்வை ஒப்பிடும்போது எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) மறுதேர்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் சுமார் 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் நீர் மறுதேர்வை எழுதினர். நீட் தேர்வை எழுத நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற்றது.
இறுதி நேர அலைக்கழிப்பை தவிர்ப்பதற்காக, காலை 11 மணிக்கே தேர்வு மையங்களுக்கு தங்கள் பெற்றோர்களுடன் தேர்வர்கள் வந்து காத்திருந்தனர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.
நீட் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள், மறுதேர்வு குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இதில் பெரும்பாலானோர் ரத்து செய்யப்பட்ட தேர்வை விட மறுதேர்வு கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்கள் கருத்து
கோவையில் சில மாணவர்கள் கடந்த முறை ரத்து செய்யப்பட்ட தேர்வே எளிமையாக இருந்ததாக கூறினர். கடந்த முறை நடைபெற்ற தேர்வில் வினாக்கள் சற்று எளிமையாக இருந்ததாக கூறினர்.
பாடப்பிரிவு வாரியாக உயிரியல் பாடம், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக கூறினர். குறிப்பாக வேதியியல் பாட கேள்விகள் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை எளிமையாக இருந்ததாக கூறினர்.
சில மாணவர்கள் கூடுதலாக 15 நிமிடங்கள் கொடுத்தது மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தேர்வு கடினமாகவும் இல்லை, எளிமையாகவும் இல்லை, ஆனால் உயிரியல் பாடக் கேள்விகள் எளிமையாக இருந்ததாகக் கூறினார். இயற்பியல் கேள்விகள் நீளமாக இருந்ததாகவும் ஆனால், எளிமை என்று கூறிவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
புணேவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், '' இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்தது. ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வுக்கு முந்தைய சோதனைகள் கடந்த முறையை விட அதிகம் இருந்தது. அது பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது'' எனக் குறிப்பிட்டார்.
சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர், உயிரியல் எளிமையாக இருந்ததாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் சற்று கடினமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். முந்தைய தேர்வு எளிமையாக இருந்ததாகவும், இம்முறை மறுதேர்வு கடினமாக உணர்வதாகவும் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த மற்றொரு மாணவரும், கடந்த முறையை விட மறுதேர்வு கடினமாக இருந்ததாகத் தெரிவித்தார்.
ராஞ்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், கடந்த முறையை விட இம்முறை இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் எளிமையாக இருந்ததாகவும் கூறினார்.
Summary
NEET-UG re-examination hard as compared to the last exam says students
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு! கடினமா? எளிமையா?

நீட் மறுதேர்வு எப்படி இருந்தது? - தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து!

நீட் மறுதேர்வு நிறைவு! எந்த பாட கேள்விகள் கடினம்? மாணவர்கள் கருத்து

நீட் மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்குமா? எல்லாம் ஊகங்கள்தான்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |




