இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நிறைவு பெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.
நீட் மறுதேர்வில் இயற்பியல் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் மற்ற பாடப் பிரிவுகள் எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக உயிரியல் பாடக் கேள்விகள் எளிமையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் நீர் மறுதேர்வை எழுதியுள்ளனர். கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற்றது.
எந்த பாடக் கேள்விகள் கடினம்?
நீட் தேர்வு எழுதிமுடித்து வெளியே வந்த மாணவர்களில், சிலர், கடந்த முறை ரத்து செய்யப்பட்ட தேர்வே எளிமையாக இருந்ததாக கூறினர்.
கடந்த முறை நடைபெற்ற தேர்வில் வினாக்கள் சற்று எளிமையாக இருந்ததாக கூறினர். மேலும் உயிரியல் பாடம், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக கூறினர்.
சில மாணவர்கள் கூடுதலாக 15 நிமிடங்கள் கொடுத்தது மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக வேதியியல் பாட கேள்விகள் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை எளிமையாக இருந்ததாக கூறினர்.
சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர், இந்த முறை தேர்வை நல்ல முறையில் எழுதியிருப்பதாகவும், எனினும் கடந்த முறையை விட நீட் மறுதேர்வு கடினமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், கடந்த முறை தேர்வை விட மறுதேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும், இதில் உயிரியல் பாடப் பிரிவு கேள்விகள் மட்டும் எளிமையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
Summary
NEET-UG re-examination Candidates leave the examination centre
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய சா்ச்சையில் சிக்கியுள்ள நீட் மறுதேர்வு: தவறான கேள்விக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?

நீட் மறுதேர்வு! கடினமா? எளிமையா?

நீட் மறுதேர்வு எளிமையா? கடினமா?

நீட் மறுதேர்வு எப்படி இருந்தது? - தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |




