நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!
வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படவுள்ளது தொடர்பாக...
வரும் ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளதையொட்டி, சென்னை புறநகர் ரயில்கள் வார நாள்கள் அட்டவணைபடி இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினர்.
இதனிடையே, நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 13 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் டெலிகிராம் செயலியை தனது பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.
இந்த நிலையில், வரும் ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவிருப்பதால், அன்று வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
The railway administration has announced that Chennai suburban trains will operate according to the weekday schedule, in view of the NEET re-examination scheduled for June 21.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.