வினாத்தாள் கசிவு, இளைஞர்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ள பிரசாரத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின், கோட்டாவில் மாணவர்களுடன் ராகுல் காந்தி (ஜூன் 17) இன்று மாலை கலந்துரையாட உள்ளார்.
கோட்டாவில் உள்ள திறந்தவெளி அரங்கம் ஒன்றில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி,
நாடு தழுவிய மாணவர் மாநாடுகளின் வரிசையில் முதலாவதாக காங்கிரஸ் முன்னிறுத்தி வருகிறது.
இந்த பிரசாரத்தில் முக்கியமாக வினாத்தாள் கசிவு புகார்கள், அதிகரித்து வரும் தேர்வுக் கட்டணங்கள், நியாயமான, வெளிப்படையான ஆட்சேர்ப்பு மற்றும் கல்வி முறையை உறுதி செய்வதில் அரசு தோல்வியடைந்தது போன்ற விவகாரங்களால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துவதே நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கோட்டாவில் உள்ள மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் அலுவலகத்திலிருந்து பயிற்சி மையங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களை நடத்துபவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு, தங்கள் நிறுவனங்களைச் சேர்ந்த எந்த மாணவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
As part of the campaign launched by the Congress party regarding issues such as question paper leaks and the welfare of the youth, Rahul Gandhi is set to interact with students in Kota, Rajasthan, this evening (June 17).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







