நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியவுடன், பல்வேறு பிரச்னைகளை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் இன்று காலை இரு அவைகளிலும் கூடியது. காலை 11 மணிக்கு கூடியவுடன் மறைந்த உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு, மேக்கேதாட்டு அணை, நீட் வினாத்தாள் கசிவு, எத்தனால் பெட்ரோல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை ஏற்க அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசத் தொடங்கிய நிலையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.
எதிர்க்கட்சியினரை அமைதி காக்குமாறும், அவையைச் செயல்பட ஒத்துழைக்குமாறும் அவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
இதனிடையே, மாநிலங்களவையில் சிஜேபி போராட்டத்தில் தடியடி நடத்தியது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரு அவைகளும் பகல் 12 மணிக்கு மீண்டும் கூடிய நிலையில், அமளி தொடர்ந்ததால் பகல் 12.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
Uproar by opposition parties - Lok Sabha proceedings adjourned immediately after commencement
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









