தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்துள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் அவர்கள் இணைந்ததற்கு, இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், அவர்களையும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அழைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. இதனையொட்டி கூட்டத்தை சுமூகமாக நடத்தி முடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி உறுப்பினர்கள் 20 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திரிணமூல் கட்சியின் இழப்பின் வாயிலாக தேசியவாத குடிமக்கள் கட்சி திடீரென வலுவடைந்த கட்சியாக மாறியுள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது, ஆபத்தானது எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா பேசியதாவது:
''இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, ஜே.எம்.எம்., ஆம் ஆத்மி, தேசியவாத மாநாட்டுக் கட்சி, சிவசேனை (உத்தவ் பிரிவு), இடதுசாரிகள் என அனைத்து எதிர்க்கட்சியினரும் சில நிமிடங்களில் வெளிநடப்பு செய்துள்ளோம்.
அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சிக்கு அதாவது (நாடாளுமன்ற) இணையதளத்தில் பெயர் இடம்பெறாத ஒரு கட்சிக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுதான் எங்கள் கவலைக்குரிய விஷயம்.
இதுமட்டுமின்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 28 ஆக அலுவலகம் சார்பில் வழங்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திரிணமூலில் இருந்து விலகிய 20 அதிருப்தி உறுப்பினர்களின் கட்சித் தாவல், மக்களவைத் தலைவரால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் தகுதி நீக்கம் மீதான மனுக்கள் நிலுவையிலேயே உள்ளன.
91-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, தனி அணியாகச் செயல்பட இடமில்லை. அப்படியிருக்கையில், எந்த அடிப்படையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் இந்த 20 அதிருப்தி எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார்? அவர்கள் எவ்வாறு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்?
நாங்கள் எங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து, அதனை வெளிப்படுத்தும் விதமாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Opposition walks out of all-party meet over rebel TMC MPs' invite TMC MP Mahua Moitra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!

திரிணமூல், உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு!

அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி! காரணம் என்ன?
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly




