ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி எங்களின் கடவுள் என பாஜக பெண் அமைச்சர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
குழந்தைகளை நாளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இந்திய நேரப்படி 12.30 (அதிகாலை) மணிக்கு நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி திடலில் நடைபெறவுள்ள இப்போட்டியைக் காண ஏராளமானோர் ஆவலுடன் உள்ளனர்.
இந்தியாவிலும் கால்பந்து தொடர் பரவலாக அனைத்துத் தரப்பினராலும் பார்க்கப்படுகிறது. கேரளம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கால்பந்து இறுதிப்போட்டி குறித்து மேற்கு வங்க அமைச்சர் அக்னிமித்ரா பேசியது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மெஸ்ஸி எங்களுக்கு கடவுளைப் போன்றவர். எங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதை நாங்கள் மாற்றிக்கொள்ளாததைப்போல, மெஸ்ஸிக்கு ஆதரவு கொடுப்பதை நாங்கள் மாற்றிக்கொள்ளமாட்டோம்.
குழந்தைகளை நாளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறுவேன். மெஸ்ஸியின் விளையாட்டை நம்மால் அன்றாடமும் பார்க்க முடியாது. அவரின் ஆட்டத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனப் பேசியிருந்தார்.
Summary
Lionel Messi is our God We support him West Bengal Minister Agnimitra Paul
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











