வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை; மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றம்! காங்கிரஸ்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரையொட்டி காங்கிரஸ் கூட்டம்...

News image

இன்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி - x / congress

Updated On :16 ஜூலை 2026, 3:48 pm IST

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதில்லை என்றும் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்படுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எடுத்துரைக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் வியூக வகுப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Story image

x / congress

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ்,

"நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 19 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் 16 நாள்கள் நாடாளுமன்றம் இயங்கும். இந்த கூட்டத்தொடரில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும், அதேவேளையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் விவகாரங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மோடி அரசு கூறுகிறது. ஆனால், நடைமுறையில் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதில்லை. மாறாக, மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. மோடி அரசின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

நாங்கள் முன்பே கூறியுள்ளபடி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறையை அரசு அமல்படுத்த வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவை அளிக்கும்.

ஆனால், மோடி அரசோ பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை (delimitation) மசோதாவை நிறைவேற்ற விரும்புகிறது. எதிர்க்கட்சிகள் இதற்கு முன்பும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இனியும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும்.

மேலும் ராமர் கோயில் விவகாரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, இ20 பெட்ரோல் முறைகேடு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்னைகளை நாடாளுமமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

BJP govt should implement women reservation on the existing 543 Lok Sabha seats: congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.