வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மூன்றே மாதங்களில்..! திரிணமூல் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜிநாமா செய்தார் நடிகை கோயல் மல்லிக்!

திரிணமூல் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நடிகை கோயல் மல்லிக் ராஜிநாமா செய்தார்...

News image

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் நடிகை கோயல் மல்லிக்... - படம் - Facebook

Updated On :16 ஜூலை 2026, 4:22 pm IST

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நடிகை கோயல் மல்லிக் ராஜிநாமா செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் ஏராளமான கிளர்ச்சிகள் வெடித்து வருகின்றன.

மமதா பானர்ஜியின் தலைமைக்கு எதிராகத் திரண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனியாக ஓரணியை உருவாக்கியுள்ளதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி விலகுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளன.

இந்த நிலையில், பிரபல நடிகையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ருக்மினி மல்லிக் (எ) கோயல் மல்லிக் இன்று (ஜூலை 16) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கோயல் மல்லிக் வெறும் மூன்றே மாதங்களில் பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பதவி விலகியதற்கான காரணம் என்னவென்று இதுவரை அவர் தெரிவிக்கவில்லை.

இதன்மூலம், 10 ஆக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actress Koel Mallick has resigned from her Rajya Sabha membership with the Trinamool Congress party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.