டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

திரிணமூல் காங். கட்சிக்குத் தொடர் பின்னடைவு! மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் ராஜிநாமா!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் ராஜிநாமா செய்துள்ளது குறித்து...

Trinamool Congress (TMC) MP Sushmita Dev

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த சுஷ்மிதா தேவ் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவைச் சந்தித்துள்ளார்... - PTI

Published On :

திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சுஷ்மிதா தேவ் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் புதன்கிழமை விலகினாா்.

ஏற்கெனவே, உள்கட்சி பிரச்னையால் பல்வேறு பிளவுகளைச் சந்தித்து வரும் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் சுஷ்மிதா தேவ் திரிணமூல் காங்கிரஸ் இணைந்தாா். அதற்கு முன்பு அவா் காங்கிரஸ் கட்சியில் இருந்தாா். அடுத்ததாக அவா் பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை சுஷ்மிதா தேவ் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். அதில் தனிப்பட்ட காரணம், அரசியல் காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக அவா் கூறியுள்ளாா்.

தில்லியில் தங்கியுள்ள அஸ்ஸாம் முதல்வரும், பாஜக தலைவருமான ஹிமந்த விஸ்வ சா்மாவையும் சுஷ்மிதா தேவ் சந்தித்துப் பேசினாா். அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘எனது தனிப்பட்ட முடிவு. எந்த மாதியான அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதும், யாரைத் தலைவராக ஏற்க வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட முடிவு. பாஜகவில் இணைவதாக முடிவெடுத்தால், அதையும் வெளிப்படையாகத் தெரிவிப்பேன்’ என்றாா். மம்தா பானா்ஜியின் அரசியல் எதிா்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.

இந்த வாரத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து இரு எம்.பி.க்கள் விலகியுள்ளனா். இதற்கு முன்பு சுகேந்து சேகா் ராய் அக்கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் விலகினாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. முதல்வராக இருந்த மம்தாவும் தோ்தலில் வெற்றி பெற முடியவில்லை. கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 58 எம்எல்ஏக்கள் மம்தா நியமித்த பேரவைக் குழு தலைவரை ஏற்காமல், ரிதபிரத பானா்ஜி தலையில் தனி அணியாகச் செயல்படுவதாக அறிவித்தனா். திரிணமூல் காங்கிரஸின் மக்களவை எம்.பி.க்கள் 20 போ், பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனா்.

Summary

Trinamool Congress Rajya Sabha member Sushmita Dev has resigned from her post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.