தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று மாலை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தலைநகருக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள முதல்வர் விஜய், வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, புது தில்லிக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு தில்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா, ராகுலை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வராக பதவியேற்ற பிறகு, சோனியா காந்தி, ராகுலை அவர் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமீபத்தில் இரண்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம், 59 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தென்னிந்திய மாநிலத்தில் பழம்பெரும் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது. 1967-ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
தில்லியில் இருக்கும் முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Chief Minister C Joseph Vijay is scheduled to meet Congress Parliamentary Party chairperson Sonia Gandhi and former AICC chief Rahul Gandhi here on Wednesday evening, sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இணைப்பா?

ராகுலை விஜய் சந்திக்காதது ஏன்? காங்கிரஸ் எம்.பி. விளக்கம்
தில்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கிறாரா முதல்வர் விஜய்?!
தில்லியில் சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!




