பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ராகுல், சோனியாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

தில்லியில் ராகுல், சோனியா காந்தியை முதல்வர் விஜய் சந்தித்தது குறித்து...

News image

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதல்வர் விஜய் - ஏஎன்ஐ

Updated On :10 ஜூன் 2026, 6:27 pm IST

தில்லியில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 10) சந்தித்தார். இத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் விஜய் சந்தித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

3 நாள்கள் பயணமாக தில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, புது தில்லிக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி வந்துள்ள முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

இதன் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை முதல்வர் விஜய் இன்று மாலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Summary

Chief Minister Vijay meets Rahul and Sonia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.