மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்திக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
”எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கடந்த மாதம் ராகுல் காந்தி கலந்துகொண்டிருந்தார்.
தொடர்ந்து கடந்த வாரம் தில்லி பயணம் மேற்கொண்ட விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
à®à®©à®¤à¯ à®à®©à¯à®ªà¯à®à¯ à®à®à¯à®¤à®°à®°à¯, மாணà¯à®ªà¯à®®à®¿à®à¯ à®®à®à¯à®à®³à®µà¯ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à®¿à®¤à¯ தலà¯à®µà®°à¯ திரà¯. ராà®à¯à®²à¯ à®à®¾à®¨à¯à®¤à®¿ à®à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ நலà¯à®µà®¾à®´à¯à®¤à¯à®¤à¯à®à®³à¯.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 19, 2026
à®à®¨à¯à®¤à®¿à®¯à®¤à¯ திரà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯ à®®à¯à®©à¯à®©à¯à®±à¯à®±à®¤à¯à®¤à®¿à®±à¯à®à®¾à®à®µà¯à®®à¯, à®®à®à¯à®à®³à®¾à®à¯à®à®¿ மாணà¯à®ªà¯à®à®³à¯à®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®à®µà¯à®®à¯, à®à®©à¯à®¤à¯à®¤à¯à®¤à¯ தரபà¯à®ªà¯ à®®à®à¯à®à®³à®¿à®©à¯ நலனà¯à®à®³à¯à®à¯à®à®¾à®à®µà¯à®®à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®°à®²à¯â¦
Summary
My dear brother! Chief Minister Vijay extends birthday wishes to Rahul!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுல் நாளை சென்னை வருகை! முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்

தமிழ்நாடு நாள்! முதல்வர் விஜய் வாழ்த்து

ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




