காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளன.
இவர்களில் காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், தவெக கூட்டணியில் இணைவதாகவும் அறிவித்துள்ளன.
தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் மதிமுக தலைவர்கள் திமுகவை கடுமையாக விமர்சித்தும், தவெக அரசைப் பாராட்டியும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகுவதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் தனியாக அமர இருக்கை கோரி திமுக தரப்பிலிருந்து மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தில்லி சென்றுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய வைகோ, “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது” என்றார்.
மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் ஆரம்பத்திலிருந்தே மும்மொழித் திட்டத்தை எதிர்த்து வருகிறோம். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார்.
திமுக கூட்டணியிலிருந்து தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற மதிமுகவால் நேரடியாக தவெக அரசுக்கு ஆதரவு தர இயலாதது குறிப்பிடத்தக்கது.
Summary
MDMK General Secretary Vaiko met Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi in person today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









