காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யை சந்தித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அப்பதவியை காங்கிரஸுக்கு வழங்குமாறு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக விஜய் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Rajya Sabha Seat for Congress Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங். கட்சிக்குத் தொடர் பின்னடைவு! மாநிலங்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் ராஜிநாமா!

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!

தமிழகத்தில் ஜூன் 18-இல் மாநிலங்களவை இடைத்தோ்தல் - தோ்தல் ஆணையம் அறிவிப்பு

த.வெ.க.வின் முதல் எம்.பி. யார்? தீவிர ஆலோசனை!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani




