மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று நேரங்களில் பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது.
இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.




அதன்படி, அமைச்சர்களை, அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Government of Tamil Nadu has issued orders appointing Ministers-in-charge for all districts to accelerate district development works, monitor the delivery of welfare scheme benefits to the public, and undertake additional relief measures during times of natural calamities and disease outbreaks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK
செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

2028 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்து அனுப்ப நடவடிக்கை: ஆதவ் அர்ஜூனா







