உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தது பற்றி...

சுகேந்து சேகர் ராய்

சுகேந்து சேகர் ராய் - ANI

Published On :

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன.

கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கு எதிரான அணி, மாநில சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராக 58 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால், பேரவைத் தலைவர் அவரை அங்கீகரித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான சுகேந்து சேகர் ராய் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அந்த கடிதத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கல்வி, சுகாதாரம், தொழில், வேலைவாய்ப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட துறைகளில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துள்ளனர்.

ஆகையால், மக்களின் தீர்ப்பை ஏற்று, மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், திரிணமூல் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

Summary

TMC MP Sukhendu Sekhar Ray resigns from party, steps down as Rajya Sabha member

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.