சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே

நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எழுப்பவுள்ள பிரச்னைகள் குறித்து...

News image

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் - Photo: Kharge

Updated On :16 ஜூலை 2026, 3:42 pm IST

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் நன்கொடை விவகாரம் வரையிலான பல்வேறு பிரச்னைகளை எழுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா போன்ற முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருப்பதாவது:

“நன்கொடை திருட்டு, வினாத்தாள்கள் கசிவு மற்றும் கல்வித்துறையின் கட்டமைப்புச் சீரழிவு, சிபிஐ, அமலாக்கத்துறையைக் கைப்பற்றுதல், அரசியல் கட்சிகளை உடைத்தல், பல்வேறு ஊழல் முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, வெளியுறவுக் கொள்கை தோல்விகள், 3.5 கோடி வாகன உரிமையாளர்களிடம் எத்தனால் கலப்பு எரிபொருள் பயன்பாட்டைத் திணித்தல், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்து மழைக்காலக் கூட்டத்தொடரில் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கேள்வி எழுப்பும்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த முக்கியமான பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

We will raise issues ranging from the question paper leak to the Ram Temple in Parliament! — Kharge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.