தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தாதீர்கள் - ஆதித்யநாத் வேண்டுகோள்!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு பற்றி..

News image

அயோத்தி ராமர் கோயில் - file photo

Updated On :15 ஜூலை 2026, 1:58 pm IST

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகார பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆதித்யநாத் கூறியதாவது,

அயோத்தி ராமர் கோயில் முறைகேடு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் குறிப்பாக சமாஜ்வாதி கட்சி கடந்தகால செயல்பாடுகளை மறந்துவிட்டு, நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அரசியல் ஆக்குவதாகக் குற்றம் சாட்டி கடுமையாக விமர்சித்தார்.

அயோத்தி சம்பவம் ராமர் பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை ஒரு சுதந்திரமான அமைப்பாகும். அதன் விவகாரங்களில் தலையிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அறக்கட்டளை விசாரணைக்குக் கோரிக்கை விடுத்ததையடுத்து, மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை வந்த உடனேயே, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கைகளுடன் தார்மீக அடிப்படையில் முன்னாள் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் ராஜிநாமா செய்துள்ளனர்.

ஆனால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி அயோத்தி ராம ஜென்ம பூமி மற்றும் ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது நியாயமற்றது என்று அவர் கூறினார்.

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Wednesday said the alleged theft of donations at the Ram temple had hurt the faith of devotees, but the opposition move to defame Ayodhya and Ram Janmabhoomi was not justified.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.