வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் தெரிவித்த கருத்து.

News image

காங்கிரஸ் கொடியுடன் தொண்டர்கள். - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 9:37 pm IST

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கை நிதியில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா பேசியதாவது:

இந்த வழக்கில் ராஜிநாமாக்கள் மட்டும் போதாது. இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கோயிலின் முழு கட்டுமானமும் பொதுமக்களின் பணத்தில்தான் கட்டப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளாலும், பொதுமக்களின் பணத்தாலும் இந்தக் கோயில் கட்டப்பட்டது. உங்கள் ஆள்களை ஏன் அறக்கட்டளையில் அமர்த்த விரும்புகிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன சுயநலம் இருக்கிறது?

அயோத்தியின் துறவிகள் அறக்கட்டளையை நடத்த வேண்டும். சங்கராச்சாரியார் அல்லது ராமானுஜர் சம்பிரதாயத்தைச் சேர்ந்த துறவிகள் அறக்கட்டளையை நடத்த வேண்டும். நீங்கள் ஏன் அவர்களை உள்ளே கொண்டு வருவதில்லை?

இவ்வளவு பெரிய திருட்டு நடந்திருப்பதால், சிறிய ஆள்களைப் பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதில் சம்பந்தப்பட்ட முக்கியப் நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

Summary

Congress MP Rajeev Shukla stated on Tuesday (July 7) that no action has been taken in the Ram Temple donation irregularity case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.