மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா பேரணி! கற்களுடன் நிற்கும் லாரியால் பரபரப்பு!

நாடாளுமன்றம் நோக்கி சிஜேபி பேரணி நடைபெறும் சாலையில் கற்களுடன் நிற்கும் லாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - எக்ஸ்

Updated On :20 ஜூலை 2026, 8:49 am IST

புது தில்லி, ஜந்தர் மந்தரிலிருந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லவிருக்கும் நிலையில், அப்பகுதியில் லாரி ஒன்றில் கற்கள் நிரப்பப்பட்டு சாலையில் நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றம் நோக்கி இன்று காலை அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்த்திருந்தது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பும் விடுத்திருந்தது.

அமைதியான முறையில், நாடாளுமன்றம் நோக்கி நாங்கள் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுகக் காவல்துறை திட்டமிட்டுள்ளது என்று தெரியவில்லை. ஜந்தர் மந்தர் அருகே கற்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக சிஜேபி தலைவர் அபீஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இன்று காலை தொடங்கவிருக்கும் நிலையில், இந்த பேரணி நடைபெறவிருக்கிறது. கூட்டத்தின் முதல் நாள் நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியிலும் சிஜேபி போராட்டத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்து வரும் நிலையில் அவர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Summary

'Cockroach Janata' rally heads towards Parliament! Lorry loaded with stones causes a stir!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.