மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

இந்தியா

இன்றைய செய்திகள் ஜூலை 20 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

இன்றைய செய்திகள் ஜூலை 20 -  நேரலை

KARMA

Updated On :20 ஜூலை 2026, 10:03 pm IST
4:33 pm, 20 ஜூலை 2026

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன்! சோனம் வாங்சுக் வெளியிட்ட கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

நீட் முறைகேடுகளை எதிர்த்து உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருந்தபடி, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

4:33 pm, 20 ஜூலை 2026

மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

3:04 pm, 20 ஜூலை 2026

டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி மயக்கம் வருவதாகக் கூறி டிராமா செய்வதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் இன்று (ஜூலை 20) குற்றம் சாட்டினார்.

3:04 pm, 20 ஜூலை 2026

துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை!

விசாரணையின்போது காவல் துறையினர் தாக்க முயற்சித்ததாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் திமுக எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) தெரிவித்தார்.

12:04 pm, 20 ஜூலை 2026

இளைஞர்கள் பெயரில் அரசியல் விளையாட்டு!

இளைஞர்கள் பெயரில் அரசியல் கட்சிகள் தங்கள் விளையாட்டை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் இன்று (ஜூலை 20) விமர்சித்தார்.

12:03 pm, 20 ஜூலை 2026

வன்முறையைத் தேர்வு செய்தது பாஜக!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் கோரிக்கை குறித்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக வன்முறையை பாஜக அரசு தேர்வு செய்துள்ளதாக திமுக எம்.பி., கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

12:02 pm, 20 ஜூலை 2026

தேசியக் கொடியை அவமதித்த காவலர்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் இளைஞர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், தேசியக் கொடியை அவமதித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

9:53 am, 20 ஜூலை 2026

சிஜேபி போராட்டம் தீவிரம்! அமித் ஷாவுடன் தர்மேந்திர பிரதான் சந்திப்பு!

9:53 am, 20 ஜூலை 2026

நாடாளுமன்ற கதவு மூடல்! தில்லியில் தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!

9:52 am, 20 ஜூலை 2026

திமுக எம்எல்ஏ பேச்சுக்கு வன்னி அரசு பதில்!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சுக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பதில் அளித்துள்ளார்.

8:50 am, 20 ஜூலை 2026

உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தனது உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை முடித்துக் கொண்டார்.

7:21 am, 20 ஜூலை 2026

மக்களவையில் மசோதா

மக்களவையில் உச்ச நீதிமன்ற (நீதிபகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

6:48 am, 20 ஜூலை 2026

தங்கம், வெள்ளி விலை நிலவரம்! (ஜூலை 20) 

6:48 am, 20 ஜூலை 2026

ராகுலைக் கிண்டல் செய்த மோடி!

6:48 am, 20 ஜூலை 2026

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடி

உலக அரங்கில் இந்தியா பரவலான அங்கீகாரத்தைப் பெற்று வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

5:41 am, 20 ஜூலை 2026

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

5:41 am, 20 ஜூலை 2026

இணைய சேவை முடக்கம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியை முன்னிட்டு, ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் சுற்றுப் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5:40 am, 20 ஜூலை 2026

சிஜேபி போராட்டம் - போலீஸ் தடியடி

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆதரவாளார்கள் மற்றும் இளைஞர்கள் மீது தில்லி காவல்துறை தடியடி நடத்தி வருகின்றது.

5:18 am, 20 ஜூலை 2026

மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி! சிஜேபி - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு

நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல, ஜந்தர் - மந்தர் நோக்கி ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் வந்துகொண்டிருக்கும் நிலையில், தடுப்புகளை மீறி பேரணி செல்ல முயன்ற சிஜேபியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

5:18 am, 20 ஜூலை 2026

அனுபமா பரமேஸ்வரன் - துருவ் பிரேக் அப்? இன்ஸ்டா பதிவால் எகிறும் பரபரப்பு!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் - நடிகர் துருவ் விக்ரம் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பதிவுகள் அவர்களுக்கு இடையே பிரேக் ஆப் ஆகியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

5:18 am, 20 ஜூலை 2026

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

5:18 am, 20 ஜூலை 2026

நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா பேரணி! கற்களுடன் நிறுத்தப்பட்டிருக்கும் லாரியால் பரபரப்பு!

புது தில்லி, ஜந்தர் மந்தரிலிருந்து, கரப்பான் பீச்சி ஜனதா கட்சியினர், நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லவிருக்கும் நிலையில், அப்பகுதியில் லாரி ஒன்றில் கற்கள் நிரப்பப்பட்டு சாலையில் நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.