FOLLOW US

ON GOOGLE DISCOVER

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் பேரணியில் காவல் துறை தடியடி நடத்தியது குறித்து கனிமொழி விமர்சனம்...

News image

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணியை தடியடி நடத்தி கலைத்த காவல் துறை - பிடிஐ

Updated On :20 ஜூலை 2026, 4:30 pm IST

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கை குறித்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்துள்ளது பாஜக அரசு என திமுக எம்.பி., கனிமொழி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளதாவது:

''கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்றப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நமது கல்வி முறையில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தீவிரமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக மிருகத்தனமான வன்முறையை பாஜக அரசு தேர்ந்தெடுத்துள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.

நீட் மோசடியைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சோனம் வாங்சுக் திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து அமைதியான முறையில் பேரணி தொடங்கியது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்ற நிலையில், பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டவர்களை அரசு தடுத்து நிறுத்தியது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். பேரணியாக வருவோரைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. நாடாளுமன்ற சாலையில் நுழைந்த இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

பேரணியாக அந்தப் பகுதியில் நுழைந்தவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர்.

Summary

Cockroach Janata Party rally Union BJP Government has chosen using brute force over dialogue. dmk MP kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.