FOLLOW US

ON GOOGLE DISCOVER

உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

தில்லியில் 163 தடை அமல்! பேரணி, போராட்டத்துக்கு அனுமதியில்லை! சிஜேபி பேரணி நடக்குமா?

தில்லியில் நாளை (ஜூலை 20) கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், சட்டப் பிரிவு 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image

தில்லி ஜந்தர் மந்தரில் குவிந்த இளைஞர்கள் - பிடிஐ

Updated On :19 ஜூலை 2026, 10:11 pm IST

தில்லியில் நாளை (ஜூலை 20) கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், சட்டப் பிரிவு 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், பொதுஅமைதிக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் நோக்கத்தில் எந்தவித உடனடி உத்தரவுகளை பிறப்பிக்கவும் மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் போராட்டத்தைத் தொடங்கினர்.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சோனம் வாங்சுக் முன்பு திட்டமிட்டிருந்தபடி நாளை (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இளைஞர்கள், ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டத்தை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூடத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் இக்கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நிறுவனர் அபிஜீத் அழைப்பை ஏற்று பலர், ஜந்தர் மந்தர் திடலில் குவியத் தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பேரணியும் நாளை நடக்கவுள்ளதால் 163 தடை உத்தரவு தில்லியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

163 தடை உத்தரவு என்றால் என்ன?

பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு 163 என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பிரிவு 144-ன் மற்றொரு வடிவம்.

இந்தியாவில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மாற்றப்பட்டு, பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா (BNSS) நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, முன்பு பொது அமைதியைக் காக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிவு 144 தற்போது பிரிவு 163 என்று மாற்றப்பட்டுள்ளது

இது அவசரநிலை அல்லது ஆபத்து காலங்களில் பொதுப் பாதுகாப்பு, அமைதியைப் பேண மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட்டால் பிறப்பிக்கப்படுகிறது. பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சூழலைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

போராட்டத்துக்கு அனுமதியில்லை

தில்லியில் போராட்டம் அல்லது பேரணி நடத்த எந்தவொரு அனுமதியும் கொடுக்கப்படவில்லை என தில்லி துணை ஆணையர் சச்சின் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது:

''தில்லியில் எந்தவொரு போராட்ட ஊர்வலத்திற்கும் அனுமதி கோரப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லை என்பதை தில்லி காவல்துறை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திக்கொள்கிறது.

சட்டத்தை மதிக்குமாறும், அனுமதியற்ற எந்தவொரு கூட்டம் அல்லது பேரணியிலும் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும், பொது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் ஒத்துழைக்குமாறும் தில்லி காவல்துறை அனைத்துக் குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறது'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பிரிவு 223-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தில்லி காவல் துறை எச்சரித்துள்ளது.

Summary

Delhi Police invoke section 163 ahead of Parliament session, bar cockroach janata party march

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.