தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

வாங்சுக் மீதான போலீஸ் நடவடிக்கை: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்!

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன்....

News image

பினராயி விஜயன் - X

Updated On :18 ஜூலை 2026, 6:02 pm IST

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே ஆகியோருக்கு எதிராக எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மத்திய அரசு அடக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தின் போது காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சோனம் வாங்சுக், மாணவர்கள் மற்றும் இதர சமூக ஆர்வலர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிய அவர், ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த அதிகாரத்துவத்திற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் 21 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போலீஸார் அவரை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றினர். அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறிய தில்லி போலீஸார், போராட்டக்காரர்கள் அந்த இடத்தை அமைதியான முறையில் காலி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த போலீஸ் நடவடிக்கையின் போது தான் தாக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) நிறுவனர் அபிஜீத் திப்கே, பின்னர் தானும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். பிரதமர் மோடி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சிஜேபி மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், திட்டமிட்டபடி ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியை நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

Summary

Kerala's Leader of the Opposition Pinarayi Vijayan on Saturday strongly condemned the police action against activist Sonam Wangchuk and Cockroach Janata Party founder Abhijit Dipke, accusing the Centre of "suppressing" democratic protests.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.