சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சோனம் வாங்சுக்கை நினைத்து அந்த கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை: ஆமிர் கான்

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக் குறித்து நடிகர் ஆமிர் கான் அளித்த பேட்டி...

News image

சோனம் வாங்சுக், ஆமிர் கான். - படங்கள்: பிடிஐ, இபிஎஸ்

Updated On :17 ஜூலை 2026, 9:19 pm IST

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக் குறித்து நடிகர் ஆமிர் கான் அளித்த பேட்டியில், “3 இடியட்ஸ் (நண்பன்) படத்தில் வரும் கதாபாத்திரம் இவரை மையமாக வைத்து உருவாக்கப்படவில்லை” எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

நண்பன் படத்தில் பலரும் வியந்து பார்த்த விஜய்யின் கதாபாத்திரமான கொசக்சி பசப்புகழ் என்ற கற்பனை கதாபாத்திரம் சோனம் வாங்சுக்கை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாகவும் பரவலாக சமூக வலைதளத்தில் கூறி வருகிறார்கள்.

பொறியாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர், கண்டுபிடிப்பாளராகவும் சோனம் வாங்சுக் இருக்கிறார். இவரை வைத்தே அந்த ‘கொசக்சி பசப்புகழ்’ (ஹிந்தியில் ஃபுன்சுக் வாங்டு) என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பலர் கூறி வருகிறார்கள். அதற்கு ஆமிர்கான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லண்டன் திரைப்பட விழாவில் இருக்கும் ஆமிர் கானிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது:

இல்லை. அது உண்மையில்லை. அது ஒரு தவறான கருத்து. 3 இடியட்ஸ் படப்பிடிப்பின்போது சோனம் வாங்சுக் பற்றி எங்களுக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும் அவர் நல்ல விஷயங்களை செய்து வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சோனம் வாக்சுக் உடல்நலன் குறித்து நம் அனைவருக்கும் அக்கறை இருக்கிறது. விரைவில் அந்தப் போராட்டம் முடிவுக்கு வருமென நினைக்கிறேன் என்றார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தி ஆமிர் கான் நடிப்பில் 2009ல் 3 இடியட்ஸ் படம் வெளியானது. இதனை 2012ல் நடிகர் விஜய் நண்பன் படமாக ரீமேக் செய்தார். இந்தப் படமும் கொசக்சி பசப்புகழ் என்ற கதாபாத்திரமும் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு மிகவும் புகழ்பெற்றது.

நீட் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களுக்காக, கரப்பான் பூச்சி மக்கள் கட்சி சார்பில், தில்லியில் ஜந்தர் மந்தரில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக் விரைவில் நலம்பெற வேண்டுமென பலரும் விரும்புகிறார்கள்.

Summary

Aamir Khan's remark on Sonam Wangchuk not being '3 Idiots' inspiration sparks political, social media reactions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.