கேரளத்தில் சுமார் ரூ.10,000 கோடி முதலீட்டில் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்க டாடா குழுமம் முடிவெடுத்துள்ளதாக முதல்வர் விடி சதீசன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள முதல்வர் விடி சதீசன், “கப்பல் கட்டும் தொழிலில் முதலீடு செய்ய ஒரு பெருநிறுவனம் தயாராக இருக்கிறது. அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கவும் தயாராக இருக்கிறது.
கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறோம். ஒரு மாதத்திற்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஃபி முதல் சொகுசு கார்கள் வரையிலும், எஃகுப் பொருள்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரையிலும் தயாரித்து வரும் 180 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தைக் கொண்டுள்ள டாடா நிறுவனம் கப்பல் கட்டும் தளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஏற்கெனவே, கேரளத்தின் விழிஞ்சத்தில் அதானி குழுமம் மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்டுள்ளது. ஆழ்கடல் சரக்கு மாற்றும் மையமாக செயல்படும் இந்த துறைமுகத்தில் எம்.எஸ்.சி மெடிட்டரேனியன் கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து ரூ. 14,000 கோடி ( 1.4 பில்லியன் டாலர்கள்) முதலீடும் கிடைத்துள்ளது.
எம்.எஸ்.சி மெடிட்டரேனியன் முதலீடு குறித்து முதல்வர் விடி சதீசன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய கப்பல் கட்டும் தொழிலைக் கொண்டுள்ள இந்தியாவும் தென் கொரியாவும், கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், கேரளத்தில் விழிஞ்சம் மற்றும் கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக புதிய கப்பல் கட்டும் தளம் அமையவிருக்கிறது.
Summary
The Tata Group has sought approval to invest ₹10,000 crores ($1 billion) in shipbuilding in Kerala, according to chief minister V.D. Satheesan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









