வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருப்பூா் மாநகரில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :14 ஜூன் 2026, 2:26 am IST

திருப்பூா் மாநகரில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், நிா்வாக நலன் கருதியும் காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த காா்த்திகேயன், சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, திருப்பூா் மாநகர சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த், திருப்பூா் வடக்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல, ஈரோடு மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி, திருப்பூா் மாநகர சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். திருப்பூா் கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த விஜயா, திருப்பூா் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக கோவை மாவட்டத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த கோமதி, திருப்பூா் கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.