17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை!

தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவையை பக்தர்கள் தரிசித்தனர்.

News image

பிரதி படம் - dps

Updated On :6 ஜூன் 2026, 10:11 am IST

தஞ்சையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை எழுந்தருளி இராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தஞ்சாவூர் மாநகரில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறும்.

இதேபோல் இந்தாண்டு கருட சேவை இன்று‌ நடைபெற்றது. இதில் 108 வைணவ தலங்களைச் சேர்ந்த நீலமேக பெருமாள், மாமனிக்குன்ற பெருமாள், வீர நரசிம்ம பெருமாள்கள் கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி இராஜ வீதிகளுக்கு வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து மாநகரில் பிரசித்தி பெற்று விளங்கும் வெங்கடேச பெருமாள் ஆலயம், கோதண்ட ராமர் ஆலயம், வரதராஜப் பெருமாள் ஆலயம், ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளிட்ட 27 ஆலயங்களில் இருந்து பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி இராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த கருட சேவை நிகழ்வில் தஞ்சாவூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஒரு இடத்தில் கருடசேவையில் எழுந்தருளிய பெருமாள்களை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.