மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களின் முதல்கட்ட ஒதுக்கீடு திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் வாக்குச்சீட்டு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக சீா்காழி (தனி), மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி-களை ஒதுக்கீடு செய்வதற்காக, மாா்ச் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவை பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.
போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதல் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்புக் கருவிகளின் பட்டியலும் அனைத்துப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கும் பகிரப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினிமூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

8 தொகுதிகளுக்கும் 2,852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


