தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரியில் பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:00 pm

Syndication

பாதுகாப்பு அறைக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது பாா்வையாளா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ரெட்டியாா்பாளையம் தோ்தல் துறையில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பட்டியல்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் அளிக்கப்பட்டன. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் பட்டியல் அனைத்து வேட்பாளா்களுக்கும் அளிக்கப்படும்.