சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 19) காலை சவரனுக்கு ரூ. 2,160 குறைந்த நிலையில் மாலை ரூ. 3,200 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
தொடர்ந்து 4-ம் நாளாக இன்று(வியாழக்கிழமை) காலையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து ரூ.1,14,400-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 270 குறைந்து ரூ. 14,300 ஆக இருந்தது.
தொடர்ந்து இன்று மாலையும் தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு மேலும் ரூ. 3,200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,200-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு மேலும் ரூ. 400 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்துள்ளது. இதன் மூலமாக தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 14,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனையானது. இன்று மாலை வெள்ளி விலையில் மாற்றமில்லை.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டலர் மதிப்பு அதிகரிப்பு(இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
Summary
Today gold and silver rate (march 19)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8,560 அதிரடி உயர்வு!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




