தொகுதி மக்களின் நலனுக்காக அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்ததாக இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பனையூரில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் இசக்கி சுப்பையா பேசியதாவது:
''யாரையும் குறைசொல்ல நான் விரும்பவில்லை. ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட வேண்டாம். நான் யாரிடமும் கையூட்டு பெறவில்லை, இனியும் பெறமாட்டேன்.
இப்போது இருக்கும் முதல்வர் நான் நினைப்பதை செய்கிறார். அவருடன் இருந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். தொகுதி மக்களுக்காக தவெகவில் இணையும் முடிவை எடுத்தேன்.
முதல்வர் விஜய்க்கு கீழ் செயல்படும் கட்சியில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாய்ப்பு தந்தால் அம்பாசமுத்திரத்தில் மீண்டும் போட்டியிடுவேன்.
கடந்த 5 ஆண்டுகளில் எதனையுமே செய்யவில்லை. ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதனால், தொகுதி மக்களின் நலனுக்காக தவெகவில் இணைந்துள்ளேன். குதிரை பேரம் என்றால் என்ன என்று இரவு முழுவதும் யோசித்தேன். பதில் கிடைக்கவில்லை'' என இசக்கி சுப்பையா பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும், தலைமை நிலையச் செயலரும், எம்எல்ஏவுமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஓர் அணியாகவும் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
திடீர் திருப்பமாக எஸ்.பி. வேலுமணி அணியில் செயல்பட்டு வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (மே 26) அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
Summary
I Joined TVK for the Welfare of My Constituency: Isakki Subbiah Clarifies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

இசக்கி சுப்பையா ராஜிநாமா ஏற்பு! தவெகவில் இணைந்தார்!
அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜிநாமா!

மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜிநாமா?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



