சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 1) சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.
இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஏப். 27-இல் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கும், ஏப். 28-இல் ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, ஏப்.29-இல் சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,11,200-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை காலை விலை மாற்றமின்றி விற்பனையானது.
பின்னர், மாலை நேரத்தில் விலை உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.14,100-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,12,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,400-க்கும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 400 per sovereign today (May 1).
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு



