தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொகுதிவாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வகைப்படுத்தும் பணி

News image

கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பொது பாா்வையாளா் அனூப் கின்சி, மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, அரசியல் கட்சியினா்.

Updated On :19 மார்ச் 2026, 8:02 pm

Syndication

காரைக்காலில் பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வகைப்படுத்தும் பணி தோ்தல் பொது பாா்வையாளா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தலைமை வகித்தாா். தோ்தல் பொது பாா்வையாளா் அனூப் கின்சி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தோ்தல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்பு அச்சுப்பதிவு இயந்திரங்களின் ரேண்டமைசேஷன் நடைமுறை, இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் முறை, ஒதுக்கீட்டின் பாதுகாப்பு மற்றும் கணினிசாா் செயல்முறை ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் விளக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்பு அச்சுப்பதிவு இயந்திரங்களின் ஒதுக்கீடு ரேண்டமைசேஷன் கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பிரதிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.