மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூரில் உள்ள மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த மாதாந்திர ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளுக்கு சீல்!

மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரியில் பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


