மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்து பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) விமர்சித்தார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும், நிர்வாகத்தில் தவறு, ஊழல் செய்த ஒவ்வொரு திமுக அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.
மதுரையில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''மாநகரத் தலைவர்கள் ஊழலுக்காக பதவியை ராஜிநாமா செய்தனர். இப்படிப்பட்ட திமுக அரசு தேவையா? தவறு செய்த ஒவ்வொரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அதிமுக. ஏராளமான வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்காக கொடுத்துள்ளோம். வேலைக்கு வராத ஆசிரியருக்கு முழு ஊதியமா? என கேட்டவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
மக்களுக்கான நல்ல திட்டங்களை கொடுத்தது அதிமுக அரசு. அதனால்தான், எங்களையும் எங்கள் கூட்டணியையும் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் கேட்டதையெல்லாம் மத்திய அரசு கொடுத்தது.
முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுகிறார். அவரின் நிலை பரிதாபமாக உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்.
திமுகவை பொறுத்தவரை குடும்பம் செழிக்க திட்டங்களை வகுத்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை வகுத்தது அதிமுக. நமக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா.
அவர்களின் தலைவர் கலைஞர் கருணாநிதி குடும்பத்துக்காக வாழ்ந்தார். இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
அதிமுகவை உடைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. அதிமுக புதுப்பொலிவுடன் தேர்தலை சந்திக்கிறது. இனி யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது. இது இயற்கையான கூட்டணி. அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட பள்ளிகளை திமுக ஆட்சியில் மூடினார்கள். கரோனா காலகட்டத்தில் கூட மக்கள் பாதிக்கப்படக் கூடாது என செயல்பட்டது அதிமுக. ஆனால், எந்தவித பேரிடரும் இல்லாதபோது கூட குடிநீர் வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு என வரிகளை திமுக அரசு உயர்த்தி வருகிறது. இந்த நிலை அதிமுக ஆட்சியில் மாறும்'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Summary
Resignation from DMK over Corruption ₹200 Crore Scam in Madurai Corporation edappadi palanisami campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து திமுக துரோகம் இழைத்துவிட்டது! - எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை


