இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம்: கோவை எஸ்பிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோவையில் போலீஸாரால் இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விளக்கம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவையில் போலீஸாரால் இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விளக்கம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த மே மாதம் நடைபெற்ற கொலை வழக்கு தொடா்பாக கே.கே.புதூா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (28) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை (செப்.10) அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கு அவரை போலீஸாா் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கை விரல் எலும்புகள் முறியும் அளவுக்கு கண்ணன் காயமடைந்துள்ளாா். இது குறித்து கண்ணன் மற்றும் அவரது சகோதரா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசுவிடம் புகாா் மனு அளித்தனா்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com