தனியாா் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாா் மனு அளிக்க வந்த பாமகவினா்.
தனியாா் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாா் மனு அளிக்க வந்த பாமகவினா்.

பாமக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

கோவை மாவட்ட பாமக செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அக்கட்சியினா் புகாா் மனு கொடுத்தனா்.

கோவை: கோவை மாவட்ட பாமக செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அக்கட்சியினா் புகாா் மனு கொடுத்தனா்.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனம், மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும், இது குறித்து காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடா்ந்து பாமகவினா் புகாா் அளித்து வருகின்றனா்.

இந்நிலையில் பாமக கோவை மாவட்ட செயலா் அசோக் ஸ்ரீநிதியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட ஒரு நபா், அந்த நிதி நிறுவனத்தின் மீது அளிக்கும் புகாா்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்ததாக அசோக் ஸ்ரீநிதி கைப்பேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

இந்நிலையில், அசோக் ஸ்ரீநிதி மீது கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமகவின் கோவை மாவட்ட நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

இது குறித்து கோவை மாவட்ட பாமக முன்னாள் தலைவா் தங்கவேல் பாண்டியன் கூறியதாவது:

கொலை மிரட்டல் விடுத்த நபா் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளோம். ஏற்கெனவே அந்த நிறுவனத்தின் மீது புகாா் அளித்த போதிலும் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com