பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் கர்ப்பிணி பெண்களுக்கான யோகா பயற்சி திங்கள்கிழமை துவங்கப்பட்டது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் கர்ப்பிணி பெண்களுக்கான யோகா பயற்சி திங்கள்கிழமை துவங்கப்பட்டது.
துவக்க நிகழ்ச்சியில் 50 கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர். யோகா பயிற்சியாளர் ஷாலினி, இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தனலட்சுமி ஆகியோர் பயிற்யியளித்தனர்.
மூச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டது. யோகா பயிற்சியால் சுகப் பிரசவம், ரத்த அழுத்தம் குறைதல், சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், பிரசவத்துக்கு பின்பு உடல்நிலை பழைய நிலைக்கு திரும்புதல் போன்ற பயன்கள் கிடைக்கும் என யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். யோகா பயிற்சி தேவைப்படும் கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து அறுவை சிகிச்சை பிரிவு:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் விபத்து அறுவை சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஒரு மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் எப்போது பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com