கோவையில் பரவலாக மழை

கோவையில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

கோவையில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் ஒடிஸா மாநிலம் முதல் தென் தமிழகம் வரை நிலப்பரப்பின் மேலே ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலைக் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, கோவையில் செவ்வாய்க்கிழமை பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணி முதல் புறநகர் பகுதிகளான சூலூர், கருமத்தம்பட்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
அதைத் தொடர்ந்து பீளமேடு, கணபதி, காந்திபுரம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. 
கோவை, நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையத்தில்...:
மேட்டுப்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது.            
மேலும் மழை காரணமாக மலை ரயில் போக்குவரத்தும் புதன்கிழமை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com