கோவை குற்றாலத்துக்கு ஒரே நாளில் 2,800 பேர் வருகை: ரூ.1.51 லட்சம் வசூல்

கோவை குற்றாலம் அருவியை காண விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 2,808 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

கோவை குற்றாலம் அருவியை காண விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 2,808 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 
இதன் மூலமாக வனத் துறைக்கு ரூ.1.51 லட்சம் வசூலாகியுள்ளது. கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவை குற்றாலம் அருவிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.  
அதிலும் வார விடுமுறை நாள்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.   இந்நிலையில்,  இந்த அருவியில் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. 
 காலை 10 முதல் மாலை 4 மணி வரையில் பெரியவர்கள் 2,442 பேர், சிறியவர் 366 பேர் என மொத்தம் 2,808 பேர் அருவியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். 
இதில், பார்வையாளர் நுழைவுக் கட்டணம் , இரு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தக் கட்டணம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு 721 வசூலாகியுள்ளதாக போளுவாம்பட்டி வனச் சரகர் பழனிராஜா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com