மனித - விலங்கு மோதலுக்கு தீர்வுகாண நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் உறுதி

கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் நிலவும் மனித - விலங்கு மோதல்களுக்கு தீர்வு காணும்

கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் நிலவும் மனித - விலங்கு மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில் 3 மாதங்களில் வரைவு அறிக்கை தயாரித்து அரசிடம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். 
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மனித - விலங்குகள் மோதல்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தக்கோரியும், இழப்பீடுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கக் கோரியும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 
 அதைத் தொடர்ந்து ஆட்சியர் கு.ராசாமணி பேசுகையில், "மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிலவி வரும் மனித - விலங்கு மோதல்களுக்கு வனத் துறை, வருவாய்த் துறை, விவசாயிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகள் அடங்கிய முழுமையான வரைவு அறிக்கை 3 மாதங்களில் தாயர் செய்து, மாநில அரசுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 வரைவு அறிக்கை தயாரிப்பதற்குத் தேவையான கருத்துகளை அனைவரும் விண்ணப்பமாக அளிக்கலாம். வன விலங்கு ஊடுருவலை கட்டுப்படுத்துவதற்கான வழிகள், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் குறித்து முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும்.  ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை புகைப்படங்களாகவும், விடியோக்களாகவும் அளிக்கலாம். அதைத் தொடர்ந்து வனத் துறை, வருவாய்த் துறை, விவசாயிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அனைவரின் கருத்துகள் அடங்கிய வரைவு அறிக்கை தயார் செய்யப்படும். வனப்பகுதியில் காணப்படும் கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com