பண மோசடிப் புகார்: விடுதி பெண் காப்பாளர் கைது

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வாங்கிய ரூ.13 லட்சத்தை தராமல் மோசடி செய்த அரசு பெண்கள் காப்பக வார்டனை போலீஸார்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வாங்கிய ரூ.13 லட்சத்தை தராமல் மோசடி செய்த அரசு பெண்கள் காப்பக வார்டனை போலீஸார் சனிக்கிழமை மாலை கைது செய்தனர்.
கோவை, ராமநாதபுரம் சுப்பிரமணியதேவர் வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜமாணிக்கம் (38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சூலூர் அருகே கலைமகள் நகரைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் சூலூர் விமானப்படை தளத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் உறவினர்கள். 
கருப்புசாமியின் மனைவி ராஜேஸ்வரி கோவை அருகே சின்னதடாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் காப்பக விடுதியில் வார்டனாக உள்ளார். கருப்புசாமியும், ராஜேஸ்வரியும் கடந்த செப்டம்பர் மாதம் ராஜமாணிக்கத்திடம் ரூ.13 லட்சம் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் பணத்தை நவம்பர் மாதம் தருவதாகக் கூறியுள்ளனர். 
இதையடுத்து பணம் வாங்க ராஜமாணிக்கம் கருப்புசாமி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ராஜேஸ்வரியும், அவரது தம்பி சசிகுமாரும் பணத்தை திருப்பித் தரமுடியாது என்று கூறி அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் ராஜமாணிக்கம் அப்போது புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் ஜனவரி 10 ஆம் தேதி கருப்புசாமி, ராஜேஸ்வரி, சசிகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேஸ்வரியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான கருப்புசாமி, சசிகுமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com