காரமடை டாக்டர் ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்பில் 2019- 20 ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி, சீருடை, விடுதி உள்ளிட்ட வசதிகளை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தருகிறது. இதன் ஒருபகுதியாக கபடி போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளஸ் பொது தேர்வு முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அணிகளாகப் பிரிக்கப்பட்டு உடல் திறன், தடுப்பாட்டம், விளையாட்டு நுணுக்கம் மற்றும் சான்றிதழ் அடிப்படையில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.